Thursday, April 30, 2009

வானம் பார்த்த பூமியில் ஒரு குடையின் கதை..

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட
துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில்
குடைக்கு எங்கு கிடைக்க போகிறது
மழையின் ஸ்பரிசம்..!!

இங்கு கோடை தவிர ஒரு
பருவமும் வந்ததில்லை
சூட்டை தவிர ஒரு
உணர்வும் கண்டதில்லை…!!

குடைகள் தவமிருக்க
படைகள் துயர் துடைக்க
மழை வந்து கொண்டே இருக்கிறது
நூற்றாண்டு காலமாக …!!

குடைக்கெதற்கு மழை..?
வெயில் போதாதா..!
விவாதங்கள் பல கடந்து..
நைந்து தான் போய் விட்டது அந்த குடை…
தூக்கி எரிய குப்பை தொட்டி தேடும் படலம்…!!

வருந்துவதை தவிர
செய்வதற்கென்ன இருக்க முடியும்
குடை கொண்டானுக்கு….!!

ஈரத்தின் ஓரத்தை தொட்டு விட
துடிக்கும் ஒரு வானம் பார்த்த தேசத்தில்
குடைக்கு எதற்கு மழையின் ஸ்பரிசம்??!!!!

//**இலங்கை பிரச்சினைக்காக வருத்தம் மட்டுமே
//**பட முடிந்த இந்திய மக்களில் நானும் ஒருத்தி..

Monday, December 17, 2007

பயணங்கள்




கடந்து போகும் நிமிடங்களும்
விரைந்து ஓடும் மனித்துளிகளுமாய்
முடிந்து போகும் வருடங்கள்.....!!!

ஒவொரு நாளும் சுமந்துநிற்க்கும்
ஒரு கோடி ஏக்கங்கள்......
மறந்து போக நினைக்கும் போதும்
மறுத்துவிடும் வடிவங்கள்....!!!

திரும்பிப் பார்க்க
துணிவதில்லை யாரும்..
அதன் ரணங்களை சுத்தம் செய்ய
நேரமில்லா காரணத்தால்...!!

சிலர் காயங்கள் மருந்திடப்பட்டவை....
சிலர் காயங்கள் மருந்துக்குக் காத்திருக்க சபிக்கப்பட்டவை....
சிலர் சாபங்கள் விளக்கிகொள்ளப்படவை...
சிலர் பிறவி எடுத்ததே சாபத்தினால்...!!!!

வாழ்க்கையின் வடிவம்
வரையறுக்கப் பட்டதில்லை...
வட்டம், சதுரம், முக்கோணம்..........வெறுமை
வெறுமை கூட வடிவமாகும்
சிலரது வாழ்கையில்......!!!!

இங்கு சாயம் பூசப்படுவது
முகங்களுக்கு மட்டுமல்ல
உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்
மனசாட்சிக்கும் சேர்த்து தான் ...!!!

இங்கே நல்லவர்களாக நடக்க
நாம் செய்யும் முயற்சிகள்
நல்லவர்களாய் நடிக்க
மட்டுமே உதவுகிறது...!!!

நிறங்களோடு வேறுபடும்
வரங்கள்.....
இதயத்தை கழற்றி வைத்த
முகங்கள்....!!!

வட்டத்திற்குள் சுழலும் வாழ்க்கை-இங்கே
முடிவின் எல்லைத் தேடும்
முடிவற்ற கூட்டம்....!!!!

முடிவைத் தேடா பயணங்கள்-என்றும்
முழுமை அடைவதில்லை.....!!!

Wednesday, December 5, 2007

ஆசை




செருப்பு தைக்கும் முதியவரின்
நீண்ட நாள் ஆசை
செல்லரித்த கால்களுக்கு
இதமாய் ஒரு தோல் செருப்பு.....!!!

நானும் மின்மினிதான்.......


பறக்க சின்னதாய் சிறகு.....!
ஒளிர கொஞ்சமாய் வெளிச்சம்.......!

ஆளில்லா இரவில் அழகின் முகவரி......!

கண்ணாடி டப்பாவில் சிறை வைகக துடிக்கும்
குட்டி ரசிகர் மன்றஙகள் ......!

இப்படி எதுவும் இல்லை எனக்கு அனாலும்

ஆசையாய் தான் இருக்கிறது

நானும் மின்மினியாக………………:)